இரண்டாவது நாளாகவும் மாணவர்கள் தொடர்ந்த ஆர்ப்பாட்டம்..!



க.கிஷாந்தன்-
லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது நாளாக 21.03.2017 அன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 200 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கல்வி அதிகாரிகள் மாணவர்களின், பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத காரனத்தினால் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறும் கற்பிக்கும் அசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டாம் என கோஷங்களை எழுப்பினர்.

நுவரெலியா கல்வி அதிகாரிகள் பாடசாலைகளுக்கு வருகைதந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள் பாடசாலையில் காணப்படும் குறைப்பாடுகள் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை இரண்டு நாளாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு பாடசாலையில் உள்ள சில ஆசிரியர்கள் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது லிந்துலை பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டியிருந்தமை மேலும் குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -