கொத்து, பிரைட் ரைஸா..?? - இலங்கையில் எச்சரிக்கை

ன்றைக்கு தெருவுக்கு நான்கு துரித உணவகங்கள் இருக்கின்றன. அவசரமாய் அடுப்பை பற்றவைத்து வாணலியில் சோற்றை கொட்டி காய்கறிகளை கலந்து அதிக தீயில் வறுத்து கொடுக்கின்றனர்.

இந்த ப்ரைடு ரைஸ் அதிகம் உண்பவர்களுக்கு ஆயுள் சீக்கிரம் முடிந்து விடுகிறதாம். இதேபோல கொத்து பரோட்டா சாப்பிடுபவர்களும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம்.

இலங்கையின் சுகாதார அமைச்சரகம் இது தொடர்பாக நடத்திய ஆய்வொன்றில் கொத்து பரோட்டா மற்றும் ப்ரைடு ரைஸ் உண்பவர்கள் குறைந்த வயதிலேயே இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த இரு உணவுகளும் பாம் ஆயிலில் சமையல் செய்கின்றனர். இதில் அதிகம் வறுக்கப்படுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. மேலும் இவை ஈரல்களை பாதித்து விரைவில் அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரு உணவுகளையும் ஒரே எண்ணையில் செய்யும் உணவகத்தினர் பிற வகை உணவுகளையும் இந்த எண்ணையில் கலந்து செய்யும் பொழுது மேலும் கொழுப்பு படிமங்கள் உணவில் படிந்து விடுகின்றன.

இதனாலேயே இந்த சராசரி மனித ஆயுளினை விட அதற்கு முன்னர் இந்த உணவுகளை உட்கொண்டவர்கள் இறந்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -