யு.எல்.எம்.றியாஸ்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்படட சம்மாந்துறை வங்களாவடி பிரதேசத்தில் வீடொன்றில் விற்பனைக்காக தயார்படுத்தப்படட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளகஞ்சாவினை சம்மாந்துறை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 24 கிலோ கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டது. . சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தேஜா பெரேராவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய துர் நடத்தை தவிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.ஜி. ஜெயலதன தலைமையிலான பொலிஸ் குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 48 இலட்ச்சம் பெறுமதியான இக்கஞ்சாவினை வைத்திருந்த வீட்டின் உரிமையாலாளரையும் மற்றுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படட இருவரும் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட்னர். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.