இறுதி மூச்­சு­வரை இஸ்­லா­மிய தஃவாப் பணியே எனது இலக்கு - அன்வர் மன­துங்க

ன்வர் மன­துங்க பௌத்தராக பிறந்து பின்னர் கிறிஸ்­தவ மதத்­தை தழுவிய இவர் இஸ்­லாத்தின் பால் கவ­ரப்­பட்டு இஸ்­லாத்தைத் தழுவிக் கொண்டார். மத்­திய கிழக்கு நாடு­களில் தஃவாப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த இவர் தற்­போது கட்­டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இலங்கை பௌத்­த­ர்­க­ளுக்கும் இஸ்­லாத்தை போதித்து வரு­கின்றார்.

இறுதி மூச்­சு­வரை இஸ்­லா­மிய தஃவாப் பணியே தனது இலக்கு என்­கிறார்.

அவர் மனம் திறந்து பேசினார். அடிக்­கடி அரபுவார்த்­தை­களை உச்­ச­ரித்தார். இலங்­கையின் முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் பாரிய இடை­வெ­ளி­யொன்று இருக்­கி­றது. இந்த இடை­வெளி நிரப்­பப்­பட்­டாலே இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில் இன ஐக்­கியம் ஏற்­படும். புரிந்­து­ணர்வு ஏற்­படும். இஸ்­லாத்தைப் பற்றி பௌத்­தர்கள் கொண்­டுள்ள தவ­றான புரி­தல்கள் கலைக்­கப்­ப­ட­வேண்டும்.

இந்த தஃவாப் பணியை நான் முன்­னெ­டுக்க களத்தில் இறங்­கி­யுள்ளேன் என்­கிறார் அன்வர் மன­துங்க. அவ­ரு­ட­னான முழு­மை­யான நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம். 

உங்­களைப் பற்றி அறிந்து கொள்­ள­லாமா?

பதில்: நான் நுகே­கொ­டையில் பிறந்­தவன். பிறப்­பினால் பௌத்தன். புனித ஜோன்ஸ் கல்­லூ­ரி­யிலே எனது ஆரம்பக் கல்­வியைத் தொடர்ந்தேன். எனது 10 ஆவது வயதில் எனது குடும்பம் பௌத்த மதத்­தி­லி­ருந்து கிறிஸ்­தவ மதத்­துக்கு மதம் மாறி­யது. எனது பெற்றோர் உட்­பட என்­னுடன் சேர்த்து 6 குடும்ப உறுப்­பி­னர்கள் கிறிஸ்­தவ மதத்­திற்கு மாறி­னார்கள்.

கிறிஸ்­தவ ஆல­யத்தில் கிறிஸ்­தவ மதத்தைப் படித்தேன். க.பொ.த (உ/த) பரீட்சை எழு­தி­யதன் பின்பு 1996 ஆம் ஆண்டு கிறிஸ்­தவ மத பாட­சா­லையில் (Seminary) சேர்ந்து 2 வருட காலம் படித்தேன். படித்து முடித்து ஐந்து வருட காலம் கிறிஸ்­தவ மிஷ­ன­ரி­யில் கட­மை­யாற்­றினேன்.

இஸ்­லாத்தின் மீது எவ்­வாறு ஈர்க்­கப்­பட்­டீர்கள்?

பதில்: நான் கிறிஸ்­தவ மிஷ­ன­ரி­யில் வேலை செய்து கொண்­டி­ருந்த போது கிறிஸ்­தவ மதத்­தையும் ஏனைய மதங்­க­ளையும் ஒப்­பிட்டுப் பார்த்தேன். இந்த ஒப்­பீ­டு­க­ளுக்­காக பல மதங்­களைப் பற்றி படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன்.

எனக்கு நன்­றாக ஞாப­க­மி­ருக்­கி­றது. ஒரு முறை மலே குடும்பம் ஒன்று நான் வேலை செய்த மிஷ­ன­ரிக்கு வந்து கிறிஸ்­தவ மதத்தைத் தழுவிக் கொண்­டது. அந்த சம்­பவம் என்னை இஸ்லாம் சம­யத்தைப் படிக்கத் தூண்­டி­யது. ஏன் அந்தக் குடும்பம் இஸ்­லாத்­தி­லி­ருந்து கிறிஸ்­த­வத்­துக்­கு மாறி­யது என்று சிந்­தித்தேன்.

தொடர்ந்து 8 மாதங்கள் இஸ்­லாத்தைப் பற்றி படித்தேன். கிறிஸ்­தவ மதத்­தையும் இஸ்­லாத்­தையும் நானே ஒப்­பிட்டுப் பார்த்தேன். கிறிஸ்­தவ மதத்தை விடவும் இஸ்­லாமே மேலா­னது என்­பதை உறுதி செய்து கொண்டேன்.

எப்­போது இஸ்­லாத்­துக்கு மதம் மாறிக் கொண்­டீர்கள்? அப்­போது உங்­க­ளுக்கு ஏற்­பட்ட உணர்வு எவ்­வாறு இருந்­தது? 

பதில்: நான் 2004 ஆம் ஆண்டு இஸ்­லாத்­துக்கு மதம் மாறிக் கொண்டேன். அப்­போது எனக்­கேற்­பட்ட மகிழ்ச்­சிக்கு அள­வே­யில்லை. மகிழ்ச்­சி­யினால் உள்ளம் நிறைந்­தது. மதம் மாறி­யதை ஏனை­யோ­ருக்கு கூற முயற்­சித்தேன். என்னைச் சூழ்ந்­தி­ருந்த முஸ்­லிம்கள் இது பற்றிக் கூற வேண்டாம். கூறினால் பிரச்­சினை ஏற்­படும் என்­றார்கள். அதனால் நான் எவ­ரி­டமும் கூற­வில்லை.எனது பெற்­றோ­ருக்கும் இது பற்றி தெரி­விக்­க­வில்லை. முதலில் இஸ்­லாத்தைப் பயிற்சி செய்து பார்ப்போம். தவ­றா­ன­தாக இருந்தால் பிறகு மாறிக் கொள்வோம் என்ற நிலைப்­பாட்­டிலே இருந்தேன். அத­னாலே எனது மத­மாற்­றத்தைப் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை. 

இஸ்­லாத்­துக்கு மதம் மாறிக் கொண்­டதும் எவ்­வா­றான திட்­டங்­களை முன்­னெ­டுத்­தீர்கள்?

பதில்: இஸ்­லா­மிய அமைப்­பொன்­றுடன் இணைந்து தஃவாப் பணி­களை முன்­னெ­டுத்தேன். கட்­டு­ரைகள் எழு­தினேன். பிர­சங்­கங்கள் நிகழ்த்­தினேன். இரண்டு வரு­டங்­க­ளாக இந்தப் பணியில் ஈடு­பட்டேன். ஒரு ஜமா­அத்­துடன் தொடர்­பு­பட்டு பிர­சாரப் பணி­களை முன்­னெ­டுத்­ததால் ஏனைய ஜமா­அத்­துக்­க­ளுக்­கி­டையில் தவ­றான கருத்து நில­வலாம் என்­பதால் ஜமா­அத்­துகளுடன் தொடர்­பு­ப­டாமல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தேன். 

2009 ஆம் ஆண்டு மத்­திய கிழக்கு நாடான பஹ்­ரை­னி­லி­ருந்து எனக்கோர் அழைப்பு வந்­தது. பஹ்­ரைனின் Discover Islam எனும் அமைப்பு இந்த அழைப்­பினை விடுத்­தது. அழைப்பை ஏற்று பஹ்ரைன் நாட்­டுக்குச் சென்று 3 மாதங்கள் தங்­கி­யி­ருந்து அங்கு வாழும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இஸ்­லாத்தைப் போதித்தேன். விளக்­கினேன். இஸ்­லாத்தின் கோட்­பா­டு­களைத் தெளி­வு ப­டுத்­தினேன். 2009 ஆம் ஆண்­டில் பஹ்­ரை­னி­லி­ருந்து இலங்கை திரும்பி வந்தேன்.

இலங்­கையில் எவ்­வா­றான தஃவாப் பணி­களை முன்­னெ­டுத்­தீர்கள்?

பதில்: 2009 ஆம் ஆண்டு பஹ்­ரை­னி­லி­ருந்து திரும்பி வந்து புறக்­கோட்­டையில் புத்­தக நிலை­ய­மொன்­றினை ஆரம்­பித்தேன். வெள்­ள­வத்­தை­யிலும் இதன் கிளை­யொன்­றினை நிறு­வினேன். புத்­தக நிலை­யங்­களை ஊழி­யர்கள் நடத்­தி­னார்கள். நான் இஸ்­லா­மிய மார்க்கப் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டேன். கற்பிட்­டியில் இஸ்­லா­மிய மார்க்கப் பயிற்சி நிலை­ய­மொன்­றி­னையும் ஆரம்­பித்து இஸ்­லாத்தில் இணைந்து கொள்­வோ­ருக்கு மார்க்கப் பயிற்­சி­களை வழங்­கினேன்.

2012 ஆம் ஆண்டில் பொது­ப­ல­சேனா ஹலா­லுக்கு எதி­ராக செயற்­பட்ட காலத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பு இஸ்­லாத்­துக்கு எதி­ராக, இஸ்­லாத்­துக்கு விரோ­த­மாக முன்­வைத்த அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளுக்கும் நானே பதில் அளித்தேன். நேர்­கா­ணல்­களை வழங்­கினேன். உலமா சபை பதி­ல­ளிக்கத் தவ­றிய சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் எனது இணை­யத்­தளம் மூலம் பதில்­களை வழங்­கினேன். அர­சாங்கம் எனது இணை­யத்­த­ளத்தை இடை­நி­றுத்தம் செய்­தது.

புறக்­கோட்­டையிலிருந்த எனது புத்­தகக் கடைக்கு பொது­ப­ல­சேனா ஆத­ர­வா­ளர்கள் வந்து எனக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தார்கள். அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் நான் டுபாய், பஹ்ரைன், கட்டார் போன்ற நாடு­க­ளுக்கு சென்று அந் நாடு­களில் தஃவாப் பணி­களை மேற்கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. அப்­போது எனது புத்­தகக் கடையில் 8 ஊழி­யர்கள் பணி­பு­ரிந்­தார்கள்.

அச்­சு­றுத்தல் கார­ண­மாக 2012 ஆம் ஆண்டு கடை மூடப்­பட்­டது. ஒரு நாள் பகல் வேளையில் மூவர் எனது கடையை உடைக்க முயற்­சித்த போது அரு­கி­லி­ருந்த பொதுமக்கள் அதைத் தடுத்து நிறுத்­தி­யுள்­ளார்கள். மக்­களால் சம்­பந்­தப்­பட்ட மூவர் தொடர்பில் விசா­ரிக்­கப்­பட்ட போது அவர்கள் தமது அடை­யாள அட்­டையை காண்­பித்­துள்­ளார்கள். அவர்கள் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு பொலிஸார் என்­பது அடை­யாள அட்டை மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இக்­கா­லத்தில் நான் வெளி­நாட்­டிலே இருந்தேன். டுபாய் நாட்­டி­லி­ருந்து கட்டார் நாட்­டுக்குச் சென்றேன். இச்­சந்­தர்ப்­ப­த்தில் எனது இணை­யத்­தளம் அர­சாங்­கத்­தினால் தடை­செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனது சட்­டத்­த­ர­ணிகள் மூலம் எனது இணை­யத்­தளம் தடை செய்­யப்­பட்­ட­மைக்­கான கார­ணத்தை வின­வினேன். பாது­காப்பு அமைச்சின் உத்­த­ரவின் பேரிலே தடை­செய்­யப்­பட்­ட­தாக எனக்குத் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது நீங்கள் எந்த நாட்­டி­லி­ருந்து தஃவாப் பணி­யினை மேற்­கொள்­கின்­றீர்கள்?

பதில்: நான் டுபாய் நாட்­டிலே சிங்­க­ள­வர்கள் மத்­தியில் இஸ்­லா­மிய பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வந்து 2013 ஆம் ஆண்டு கட்டார் நாட்­டுக்குச் சென்றேன். அன்­றி­லி­ருந்து இன்­று­வரை நான்கு வருட கால­மாக இஸ்­லா­மிய பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுள்ளேன். மாற்று மதத்­த­வர்­களை பலாத்­கா­ர­மாக மதம் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் நாம் ஈடு­ப­ட­வில்லை.

ஏனைய இஸ்­லா­மல்­லா­த­வர்­க­ளுக்கு இஸ்­லாத்தின் கோட்­பா­டுகள், இஸ்­லா­மிய வாழ்க்கை முறை­யினை எடுத்து சொல்­கிறேன். அவர்கள் இஸ்­லாத்­தினால் கவ­ரப்­பட்டு விருப்­பத்­துடன் மதம் மாறிக் கொள்­கி­றார்கள்.

கட்­டாரில் வாழும் ஆபி­ரிக்க நாட்­ட­வ­ருக்கு ஆங்­கில மொழியில் இஸ்­லாத்தைப் போதிக்­கிறேன். பயிற்­சிகள் வழங்­கு­கிறேன். அவர்கள் கிறிஸ்­த­வர்கள். அத்­தோடு அங்கு வாழும் இலங்கை சிங்­க­ள­வர்­க­ளுக்கு சிங்­கள மொழியில் இஸ்­லா­மிய மத பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறேன். இவ்­வாறு கட்­டாரில் வரு­டத்­திற்கு சுமார் 100 க்கும் அதி­க­மா­னவர்களை இஸ்­லாத்தை தழுவச் செய்­தி­ருக்­கிறேன். 2013 லிருந்து இன்று வரை சுமார் 500 பேர் இஸ்­லாத்­துக்கு மதம் மாறி­யி­ருக்­கி­றார்கள்.

கட்­டாரில் பனார் என்ற பெயரில் அரசு மதப் பிர­சார நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுக்­கி­றது. Eid Charity Foundation எனும் அமைப்பின் கீழ் நான் இந்தப் பணி­யினை முன்­னெ­டுத்து வரு­கிறேன். இஸ்­லாத்தை தழுவிக் கொள்­ப­வர்­க­ளுக்கு உத­விகள் தேவைப்­பட்டால் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளான சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இடையில் எவ்­வா­றான இடை­வெ­ளி­யினை நீங்கள் காண்­கின்­றீர்கள்?

பதில்: இலங்­கையில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பல நூற்­றாண்டு காலத்­துக்கு முன்பு ஆடை கலா­சா­ரத்தில் வேறு­பா­டுகள் இருக்­க­வில்லை. ஆனால் இன்று பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. சிங்­க­ள­வர்கள் மாத்­தி­ர­மல்ல முஸ்­லிம்­களும் மேலைத்­தேய கலா­சா­ரத்­துக்கு அடி­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

1500ஆம் ஆண்டு ரொபட் நொக்ஸ் என்ற ஆங்­கி­லேயர் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளார். இலங்கை மக்­களை நேரில் கண்டு அதனை எழு­தி­யுள்ளார். அவர் ஆங்­கி­லத்தில் எழு­திய புத்­தகம் ‘எதா ஹெல­திவ’ என்று சிங்­க­ளத்தில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது. 
அவர் தனது புத்­த­கத்தில் இப்­படிக் குறிப்­பிட்­டுள்ளார்.

‘சிங்­க­ள­வர்கள் 6 அங்­குல நீள தாடி வைத்­தி­ருந்­தார்கள். அவர்கள் சாரம் (லுங்கி) மாத்­திரம் அணிந்­தி­ருந்­தார்கள். மேலாடை அணிந்­தி­ருக்­க­வில்லை. முஸ்­லிம்­களும் இவ்­வாறே ஆடை அணிந்­தி­ருந்­தார்கள். சிங்­களப் பெண்கள், மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்­தி­யிலும் ஆடை விவ­கா­ரத்தில் வேறு­பாடு காணப்­ப­ட­வில்லை.

பிரச்­சினை என்­ன­வென்றால் முஸ்­லிம்­களில் ஒரு தரப்பு கலா­சா­ரத்தை மாற்­று­கி­றது. உதா­ர­ணத்­துக்கு சம்­ப­வ­மொன்­றினைக் குறிப்­பிட முடியும். கட்­டா­ருக்கு வேலை­வாய்ப்பு பெற்று பெற்று மௌலவி ஒருவர் இலங்­கை­யி­லி­ருந்து வந்தார். அவர் வரும் போது ஜுப்­பாவும், அத­னுடன் கூடிய நீள காற்­சட்­டையும் அணிந்­தி­ருந்தார். 

அவர் முதல் மாதம் சம்­பளம் பெற்­றதும் தனது உடையை மாற்றிக் கொண்டார். முதல் மாத சம்­ப­ளத்தில் கட்டார் நாட்­டவர் அணியும் உடை வாங்­கி அணிந்தார். ஏன் இலங்­கை­யி­லி­ருந்து அணிந்து வந்த உடையை மாற்­றி­னீர்கள் என்று கேட்டேன். இலங்­கையில் அணிந்­தது பட்­டானி (பாகிஸ்தான்) ஆடை என்றார். அப்­ப­டி­யென்றால் இலங்­கையில் பாகிஸ்தான் ஆடை­யல்­லவா அணி­யப்­ப­டு­கி­றது. மத்­ர­ஸாக்­க­ளிலும் இங்கே இவ்­வா­றான ஆடை­யையே மாண­வர்கள் அணி­கி­றார்கள்.

இவர்கள் இருப்­பது இலங்­கையில், அணி­வது பாகிஸ்தான் உடை. அந்த மௌலவி கட்­டாரில் இருந்து இலங்கை திரும்­பினார். மீண்டும் அதே உடை­யு­டனே வந்தார். இது தான் சுன்னா என்று அவர் நினைக்­கிறார். 

பெண்­களும் இப்­ப­டித்தான். அதிகம் மாறி வரு­கி­றார்கள். பெண்கள் கறுப்பு நிற அபா­யாதான் அணிய வேண்டும் என்ற நிய­தி­யில்லை. இதனை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். இவ்­வாறு ஆடை கலா­சாரம் மாற்­ற­ம­டை­வ­தால்தான் இன­வா­திகள் முஸ்­லிம்கள் இலங்­கையை அரபு கொல­னி­யாக்க முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்­து­கி­றார்கள்.

முஸ்­லிம்­களின் சிலர் எமது தேசிய கீதம் இசைக்­கப்­படும் போது எழுந்து நிற்­ப­தில்லை. நமோ…. நமோ…. என்று கூறு­வது சிர்க் என்­கி­றார்கள். இஸ்­லாத்தில் எழும்பி நிற்­பது வணக்­க­மல்ல. எஹு­தியின் உடல் தக­னத்­துக்­காக எடுத்­துச்­செல்­லப்­பட்­ட­போது கூட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தி­னார்கள். தேசிய கீதத்தில் நமோ… நமோ… மாதா என்ற சொற்­களைத் தவிர்த்து எமக்கு தேசிய கீதம் இசைக்­கலாம் அல்­லவா?-

சிலர் ‘ஆயு­போவன்’ என்று சொல்ல வேண்டாம். என்­கி­றார்கள். இது தவறு. இவ்­வாறு நினைப்­பதே எமக்குள் உள்ள இடை­வெ­ளியை விரிவு­ப­டுத்­து­கி­றது.

மொழி ரீதி­யான இடை­வெ­ளிகள் எமக்குள் இருப்­ப­தாக கரு­து­கி­றீர்­களா?

பதில்: ஆம். முன்­னைய முஸ்லிம் தலை­வர்கள் சிங்­களம் பேசி­னார்கள். சிங்­க­ள­வர்­க­ளுடன் மிகவும் நெருக்­க­மாகப் பழ­கி­னார்கள். இதனால் இரு இனங்­க­ளுக்­கு­மி­டையில் ஓர் இணைப்பு இருந்­தது. உறவு இருந்­தது. சிங்­க­ள­வர்களில் பெரும்­பா­லானோர் முஸ்­லிம்­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள். முஸ்லிம் தலை­வர்­களில் ஏ.சி.எஸ்.ஹமீட், எம்.எச்.மொஹமட், ஏ.எச்.எம்.பௌசி, அலவி மௌலானா போன்­ற­வர்­களை குறிப்­பி­டலாம்.

இப்­போது மொழி ரீதி­யி­லான இணைப்­புகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. அநே­க­மா­னோ­ருக்கு சிங்­களம் சர­ள­மாக பேசத்­தெ­ரி­யாது. கிழக்கில் சிங்­களம் பேச­மு­டி­யா­விட்டால் பிரச்­சி­னை­யில்லை.

ஆனால் நாட்டில் ஏனைய பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு சிங்­கள மொழி தேவை. நாம் ஒன்­றி­ணைய மொழி அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். நான் கிறிஸ்­தவ மதத்­தி­லி­ருந்து இஸ்­லாத்­துக்கு மதம் மாறிய போது முஸ்­லிம்கள் என்னைத் தமிழ் படிக்­கு­மாறு பல­வந்­தப்­ப­டுத்­தி­னார்கள்.

பௌத்த தேரர்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன எனக் கரு­து­கி­றீர்கள்?

பதில்: பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வது ஒரு வரை­ய­றைக்­குள்­ளாக்­கப்­பட வேண்டும். இதற்­கென அரசு சட்­ட­மொன்­றினை இயற்ற வேண்டும். இன்று மத்­ர­ஸாக்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு பின்பு அவை பள்­ளி­வா­சல்­க­ளாக மாறி உள்­ளன. முஸ்­லிம்கள் நாம் சன நெருக்­கடி மிக்க சந்­தியில் பல பள்­ளி­வா­சல்­களை நிறு­விக்­கொள்­கிறோம்.

அப்­பள்­ளி­வா­சல்­களின் அதான்கள் ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. 

நாம் முஸ்லிம் அல்­லாத ஒரு நாட்டில் வாழ்­கிறோம் என்­பதை கவ­னத்திற் கொள்ள வேண்டும். சிங்­கப்­பூரில் பள்­ளி­வா­சல்கள் எவ்­வாறு எந்த இடத்தில் அமைய வேண்­டு­மென்­பது சட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு ஒதுக்­கப்­படும் காணியின் அளவு, வாகனத் தரிப்­பி­டத்­துக்­கான காணியின் அளவு என்­ப­னவற்றை சட்­டமே தீர்­மா­னிக்­கி­றது. இலங்­கை­யிலும் இவ்­வா­றான ஒரு சட்டம் இயற்றிக் கொள்­ளப்­பட வேண்டும்.

கிரா­மங்­களின் மத்­தியில் பன்­ச­லைகள் அமைந்­துள்­ளன. பன்­ச­லைக்கு அருகில் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­படும் போது பள்­ளி­வா­ச­லைச்­சுற்றி முஸ்­லிம்கள் குடி­யே­று­கி­றார்கள். பன்­ச­லையில் இருக்கும் தேரர்­க­ளுக்கு சிங்­க­ள­வர்­களின் வீடு­க­ளி­லி­ருந்தே உணவு வழங்கப்படுகிறது.

பன்சலைக்கருகில் பள்ளிவாசல்கள் அமைவதால் பௌத்த தேரர்கள் தமது உணவுக்குகூட பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதுகிறார்கள். யார் எமக்கு உணவு வழங்குவது என்று சிந்திக்கிறார்கள்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்?

பதில்: தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை 2012 முதல் தொடர்கிறது. 20 பர்ச் காணி பள்ளிவாசலுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. இது எமக்கு கிடைக்கும் சட்ட ரீதியான காணியாகும்.

எமக்கு 80 பர்ச் காணி வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்காது 20 பர்ச் காணியை பெற்று பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ளலாம். மேலும் தேவையான காணியை பணம் கொடுத்து கொள்வனவு செய்து கொள்ளலாம். முஸ்லிம் சமூகம் நிச்சயம் இதற்காக உதவி செய்யும்.

இலங்கையில் இஸ்லாம் தொடர்பான என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கவுள்ளேன். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். சட்டரீதியாக செயற்படுவதற்கு அமைப்பொன்றினை பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். பதிவு கிடைத்ததும் கட்டாரில் அங்கு நான் கடமையாற்றும் அமைப்பில் இருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளேன். இலங்கையிலே எனது தஃவாப் பணிகளை முழுநேரமாக முன்னெடுக்கவுள்ளேன்.
நன்றி - ARA.Fareel + விடிவெள்ளி- 
வை.எம்.பைரூஷ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -