கிரான் பகுதிக்கான பொதுச் சந்தை திறந்து வைப்பு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு கிரான் பகுதிக்கான பொதுச்சந்தை கட்டிடத் தொகுதி ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு கடைத் தொகுதிகளின் சாவிக் கொத்தைக் கையளித்தார். 

14 கடைத் தொகுதிகளைக் கொண்டமைந்த இந்தப் பொதுச் சந்தையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து கடைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 9 பெண்களுக்கும், யுத்தத்தால் கைகால்களை இழந்து அங்கவீனமடைந்த 2 வியாபாரிகளுக்குமாக மொத்தம் 14 கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். ஷிஹாப்தீன் தெரிவித்தார்.

15 மில்லியன் மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் கடைத் தொகுதி அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தமது நீண்ட நாள் தேவையாக இருந்த பொதுச் சந்தையை வழங்கியமைக்காக பிரதேச மக்கள் முதலமைச்சருக்கு தமது நன்றியை தெரிவித்தனர். வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். ஷிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் உட்பட பிரதேச பொது மக்களும் வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -