அதாவுல்லாவைப் பற்றிப் பேச முழு உரிமை ஹரீஸுக்கு இருக்கிறது -பின்னால் ஒட்டிய மண்ணுகளுக்கல்ல

அக்கரைப்பற்றாளர்-

2003 / 2004 ஆண்டுகளில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலும் எச்.எம்.எம்.ஹரிஸும், புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்குவாரங்களுக்குத் தமது எதிர்ப்பினைக் காட்டும் பொருட்டு உண்மையான சமூகப்பற்றோடு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பைச் செய்தனர்.

ஆனால், தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸில் முரண்பட்டுக்கொண்டு, அன்வர் இஸ்மாயிலினதும் எச்.எம்.எம்.ஹரிஸினதும் பாராளுமன்றப் பகிஷ்கரிப்பைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார் அதாவுல்லா.

அன்று ஹரிஸ், அன்று அதாவுல்லாவோடு இணையாது விட்டிருந்தால் அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்க முடியாது. அமைச்சரவை அந்தஷ்த்துள்ள அமைச்சரைக் கனவில்தான் பெற்றிருக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அதாவுல்லாவை வெற்றிபெறச் செய்ய ஹரிஸ் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதிவியையே தியாகம் செய்தார் என்பதுதான் உண்மை. ஆகவே, ஹரிஸ், அதாவுல்லாவைப் பற்றிப் பேசவும் விமர்சிக்கவும் முழு அருகதையையுமுடையவர். எனவே இதனை பின்னால் ஒட்டிக்கொண்ட மண்ணுகள் பேசக்கூடாது என்பதுவே உண்மை.

பாகம் – 01
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -