ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் சிக்கல்..

இக்பால் அலி-

டமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் சேவையாளர்களுக்கு வெளிநாட்டு விடுமுறை எடுப்பது தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்று அறிக்கையில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுவோர்களுக்கு விடுமுறை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் அந்தச் சுற்று அறிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்று அறிக்கையானது ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு பொருத்தமானது அல்ல. கல்வி அமைச்சர் மற்றும் வட மத்திய மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் கவனத்திற்கு கொண்டு வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

வட மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஈ. எம். என். எப். ஏக்கநாயவினால் வடமத்திய பாடசாலைகளுக்கு ஆசிரியர் விடுமுறை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபம் தொடர்பாகமுஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
அனைத்து ஆசிரியர்கள் சேவைகள் தொடர்பாக அதிபரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் வகுப்பு, உயர் வகுப்புக்களில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு வருட இறுதியிலேயே மட்டும் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் இதற்கு இணங்க புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார் படுத்தி வரும் 4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கும் சாதாரண வகுப்புக்காக பாடம் நடத்தும் 10, 11 வகுப்பாசிரியர்களுக்கும் மற்றும் 12, 13 ஆம் வகுப்பாசிரியர்களுக்கு மேற் குறித்த சுற்று நிரூபத்துக்கு அமைய வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிர் வரும் காலத்தில் வெளிநாட்டு விடுமுறை வழங்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்வோருக்கு மேற்படி இந்த ஆலோசனை விடயங்கள் யாவும் விசேடமாக பொறுப்புவாய்ந்த முயாமையாளர், உதவி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாடசாலை விடுமுறை நாட்களில் வெளிநாடு செல்வதற்கு விடுமுறை பெறும் ஆசிரியர்களுக்காக இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட வில்லை எனவும்
மேலும் வெளிநாடு செல்வதற்கு ஆசிரியர் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது விடுமுறைக்கு விண்ணப்பம் செய்யும் ஆசிரியருடைய கால அட்டவணை அதிபரின் மேற்பார்வையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ஹஜ் கடமைக்காகச் செல்லவுள்ளவர்கள் முஸ்லிம் சமயம் கலாசாரத் திணைக்களத்தில் முன் கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்து நபர்களுக்கு மூன்று வருடங்களுக்குப் பிற்பாடுதான் அங்கு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

 புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்காவுக்குச் செல்ல விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஹஜ் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கின்ற பட்சத்தில் இவ்வாறான நிபந்தனை விதிப்பு முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தக் கூடியதொன்று அல்ல. அது அவர்களுக்கு தடையாகவுள்ள நிபந்தனைகளே அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் புனித மக்கா ஹஜ் கடமைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்கள் செல்வதற்கு அனுமதி வழங்க முடியாத போக்கையினைக் கொண்ட விடயங்கள் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளே அதில் உள்ளன. அதனை எவ்வகையிலும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்கின்ற நிலை எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாக முஸ்லிம் ஆசிரியர்களுடைய விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வெளிநாட்டு ஹஜ் விடுமுறைக்கான நியாயத்தைப் பெற்றுப் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -