உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கு முதலமைச்சர் விடுக்கும் பணிப்புரை..!

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் தெரிவித்தார், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய தற்போது சகல உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் தமது பகுதிகளில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமது நகர மற்றும் பிரதேச எல்லைகளுக்குள் தீவிரமாக முன்னெடுக்கவும் டெங்கு பரவுக்கூடிய அபாயம் உள்ள இடங்களை அடையாளங்கண்டு அவற்றை இல்லாதொழிப்பற்கான நடவடிக்கைகளும் கிழக்கு முதலமைச்சின் செயலாளர்சுட்டிக்காட்டினார்,

பொதுசுகாதாரப் பரிசோதகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் ஆளணிப் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து அதற்குரிய தீர்வுகளை வழங்குமாறும் கிழக்கு முதலமைச்சர் தமக்கு பணித்துள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் கூறினார்,

அத்துடன் முடியுமானளவு குறித்த நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத் திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளுமாறும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தாக முதலமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கிழக்கிலிருந்து டெங்கு அபாயத்தை இல்லாமலாக்குவது மக்களின் ஒத்துழைப்பினால் மாத்தியமே சாத்தியப்படும் எனவும் அவர் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -