முஸ்லிங்களின் அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைகளுக்காகவும் வளர்த்தெடுக்கப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இன்று சிலர் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.
அனைவருடைய எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதால் அவர்கள் விரைவில் வினை அறுப்பார்கள் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கூட்டணி முஸ்தீபுகள் குறித்துகேள்வியெழுப்பிய போதே கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் இன்னும் இந்தக் கட்சி அதேதனித்துவத்துடன் விளங்குகின்றதென்றால் அதற்கு முழுக்காரணம் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவமும் சாணக்கியமான அரசியல் நகர்வுகளுமே என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ளவேண்டும்.
இதே கட்சி இன்று மாற்றுத் தலைமைகளிடம் சிக்கியிருந்தால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றொருகட்சி இருந்திருக்குமா என்பது சந்தேகமே.ஏனெனில் அவர்களுள் பலர் பிரிந்து சென்ற ஆரம்பித்த கட்சிகளை பெரும்பான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்களிடம் அடகுவைத்தவர்கள் என்ற யதார்த்த்த்தை யாராலும் மறுக்கமுடியாது.
ஆனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதே தனித்துவத்துடன் அதே வீரியத்துடனும் இன்றும் இருக்கின்றது என்பதை நாம் மறுக்கலாகாது ஏனென்றால் அமைச்சர் ரிஷாட்டோ ,ஹிஸ்புல்லாஹ்வோ, அதாவுல்லாஹ்வோ இல்லாமல் கூட நாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் கூட்டங்கள் நடக்கலாம் ஆனால் ஜனாதிபதி பிரதமர்எதிர்கட்சித் தலைவர் இருக்கும் கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கம் இன்றி கூட்டமொன்று நடைபெறாது என்பது யாரும் அறிந்த விடயமே.
நாட்டிலுள்ள அரசாங்கமும் சர்வதேசமும் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் அங்கீகரித்துள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே இன்று அதனை கூறுபோடுவதற்கான சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ரவூப் ஹக்கீமுக்கு மக்கள் ஆதரவில்லை எனக் கூற முற்படுபவர்களுக்கு அவர்களின் தேர்தல் பிரதேசமன்றி வேறு பகுதிகளில் தேர்தலில் நின்று வெற்றிபெற முடியுமா? ஆனால் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை கண்டி மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மரச்சின்னத்தில் நின்று வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,
ஏன் அமைச்சர் ரிஷாட் மயில்ச் சின்னத்தில் வன்னி அல்லாது வேறு ஒரு இடத்தில் தனித்து நின்று வென்று காட்ட முடியுமா என்பதையும் இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்,.
அது மட்டுமல்ல கடந்த காலத்தில் மஹிந்தவினதும் பஷிலினதும் செல்லப் பிள்ளையாக இருந்த பலர் கிழக்கில்உள்ள காணி விடுவிப்பு குறித்தும் அபிவிருத்தி குறித்தும் வானளவு கதையளக்கின்றனர்.
கடந்த காலத்தில் பஷில் ராஜபக்ஸவினதும் மஹிந்த ராஜபக்ஸவினதும்செல்லப் பிள்ளையாக இருந்தபோது ஏன் இவற்றையெல்லாம் சாதிக்க முடியாது போனது?
கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிகாலத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கைகள் கட்டப்பட்டே இருந்தன, எமது மக்களுக்கு அதிக சேவைகளை செய்யக் கூடிய அமைச்சுக்கள் ஏதும் வழங்கப்படாமல் முடக்கிவைக்கப்பட்டருந்தார்.
அவர் எதற்கு அவ்வாறு பழிவாங்கப்பட்டார் என்பது அன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்களுக்குத்தெரியும்., ஆகவே முஸ்லிம் சமூகத்துக்காக அமைச்சரவைக்கு உள்ளே இருந்து குரல் கொடுத்தவர்கள், அமைச்சரவைக்குள் அதிகார வர்க்கத்துக்கு சாமரம் வீசியவர்களால் மக்கள் முன் சமூக விரோதிகளாககாட்டப்படுகின்றனர்.
எனவே இந்த நல்லாட்சியில் நாம் எமது சமூகத்துக்கான அபிவிருத்திகளை துரிதப்படுத்தியுள்ளோம் தலைவரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக பலகோடிக்கணக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு பலபகுதிகளிலும் அபிவிருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன, இன்று சிலர் அவர்களுக்குப் பயந்தே நாம் இந்த அபிவிருத்திப் பணிகளை செய்வதாக கூறுகின்றனர் அவர்கள் மஹிந்தவின்செல்லப்பிள்ளையாக இருக்கும் போது செய்யாதவற்றை நாம் இப்போது செய்துகொண்டிருக்கின்றோம்.
எல்லை நிர்ணய அறிக்கை சிறுபான்மை சமூகத்துக்கு பாதகமாக அமையும் சாத்தியம் இருந்த போது அதற்குஎதிராய் தெளிவாய் குரல் கொடுத்து அவற்றுக்கான காரணங்களை விளக்குகின்றன ஆளுமையுள்ள தலைவரையே நாம் பெற்றுள்ளோம். ஆகவே இன்று அரசியல் சுயலாபத்துக்காய் மறைந்த தலைவர் உருவாக்கிய கட்சியையும் எமது சமூகத்தையும்விற்பனைப் பொருளாக்கி அரசியல் செய்வோரை நம்பி எம் சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதா?இல்லை எம் சமூகத்துக்கான பணிகளை ஆர்ப்பரிப்பின்றி ஊடக விளம்பரமின்றி தீர்க்கதரிசனத்துடன் முன்னெடுக்கும்தலைவரின் கரங்களை பலப்படுத்துவதா என்பதை நம் சமூகம் ஆழ சிந்திக்கவேண்டிய காலம்தோன்றியுள்ளது எனகிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.