அமைச்சர் நஸீர் |
ஊடகப்பிரிவு-
இறக்காமம் பகுதியில் கந்தூரி சாப்பாடு ஒவ்வாமை விவகாரத்தில், வதந்திகளை பரப்ப வேண்டாமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாகாண சுகாதார அமைச்சர் நசீர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பவத்தில் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். 3 பேரே வபாத்தாகியுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பில் நாளை சனிக்கிழமை 8 ஆம் திகதி மேலதிக தகவல்களை வெளியிட முடியும்.இந்நிலையில் தயவுசெய்து இதுதொடர்பில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என சகல தரப்புகளிடமும் பொறுப்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். மாகாண சுகாதார அமைச்சர் என்றவகையில் களத்தில் நின்று பணியாற்றி வருகிறேன். மாகாணத்தில் உள்ள வளங்களைக் கொண்டு சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் நசீர் மேலும் தெரிவித்தார்