முச்சக்கர வண்டி மோதி ஏறாவூர் முகம்மது ஹுஸைன் ஸ்தலத்தில் பலி, 03பேர் வைத்தியசாலையில்






 நசிர் ஹாஜி-

 இன்று அதிகாலை அளவ்வ பகுதியில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சச்கரவண்டி சாரதி சம்பவ இடத்தில் பலி.

இவர் ஏறாவூர், வாளியப்பா தைக்கா பகுதியில் வசிக்கும் முகம்மது குஸைன் முகம்மது முஸம்மில் (44 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் ஏறாவூர், கொழும்பு வழி செல்லும் சத்தாரின் பஸ்ஸில் ஊழியராக தொழில் செய்து, பின்னர் EVR பஸ்ஸின் உரிமையாளராக இருந்தவர்.

தற்போது கொழும்பிலேயே முச்சசக்கரவண்டி ஓட்டுகிறார்.

விடுமுறைக்காகக ஊர் வந்து கொழும்பு செல்லும்போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.

பின்னாலிருந்து பயணித்தத ஏறாவூர் காதியார் வீதியை சேர்ந்த நழீம், உவைஸ், உவைஸின் மனைவி ஆகியோர் காயங்களுக்குள்ளாகி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஜனாசா வறகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்ற இரவு 09.30 க்கு ஆட்டோவில் ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இவர்கள் கல்லலயில் வைத்து இரவுச்சாப்பாட்டை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்து, அளவைக்கு அண்மித்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் "ரொட்டி "சாப்பிட்டுவிட்டு மீண்டும் இன்று அதிகாலை 03.30 மணியளவில் கொழும்பை நோக்கி பயணிக்க தொடங்கி அரை மணித்தியாலங்களுக்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -