க.கிஷாந்தன்-
நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 03 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், 08.04.2017 அன்று மதியம் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, 03 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தால் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 4 வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இச்சுற்றிவளைப்பில், 38 வியாபார நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.