அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் சட்ட விரோமான முறையில் 05 கிலோ பன்றி இறைச்சியை தம் வசம் வைத்தியருந்த குற்றச்சாட்டிற்காக 20000/=தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
கோமரங்கடவெல.மயிலவெவ பகுதியைச்சேர்ந்த எம்.ஜயரத்ன (48வயது) என்பருக்கே இத்தண்டம் அறவிடப்பட்து.
பன்றி இறைச்சியை விற்பனை செய்து வருவதாக கோமரங்கடவெல பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே இவரிடமிருந்து 05 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.