கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு உப்பாறு காட்டுப்பகுதியில் இன்று (12) சட்டவிரோத மதுபான 05 பரல்களுடன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் ஐந்து பரல்களும் சுமார் 845 லீற்றர் இடை கொண்ட கோடாவாக உள்ளதாகவும் சாராயம் காய்க்கும் தயார் நிலையில் இது காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனை கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் புரோஜன் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவின் தேடுதல் முயற்சியில் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் . இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கிண்ணியா பொலிஸார் தேடி வருவதாகவும் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.