க.கிஷாந்தன்-
இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் 19.04.2017 அன்று பகல் 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதும், மேலும் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதுமே குளவிகள் தாக்கியுள்ளன.
இதில் ஒன்பது தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதன் பின் மூன்று தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் மேலும் ஆறு பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவர்களில் எவரும் கவலைகிடமான நிலையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.