பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையானது கடந்த 10 வருடங்களாக அல்குர்ஆன் கற்கை நெறியை நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடாக சிறார்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.
2017ம் ஆண்டுடன் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையானது 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கிறாஅத் போட்டி ஒன்றினை நடாத்த தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி காத்தான்குடி பிஸ்மி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள இக்கிறாஅத் போட்டியில் கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட எட்டு வயது தொடக்கம் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் பங்குபற்ற முடியும்.
மேலும் போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு போட்டிகளில் வெற்றியீட்டி முதலாம்;, இணை;டாம், மூன்றாம் இடத்தை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு முறையே 5000, 4000, 3000 ரூபா பணப்பரிசுகள் வழங்கப்படவும் இருக்கின்றன. மேலும் 1000 ரூபா ஆறுதல் பரிசுகளும் 10பேருக்கு வழங்கப்படவுள்ளது.
இக்கிறாஅத் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவ மாணவிகள் தங்களது குர்ஆன் மத்ரஸா அல்லது மக்தப் அல்லது அஹதிய்யா பாடசாலைக்கு ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும். மாதிரி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் www.bismigroup.org எனும் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 25ம் திகதிக்கு முன்னர் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை இல.171-4, அலியார் ஹாஜியார் ஒழுங்கை, பிரதான வீதி, காத்தான்குடி-06 எனும் முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 077 3511992 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.