திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். அவரது பொறுப்பின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மூலம் இந்த நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் மாவட்டத்தில் உள்ள 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் 115 மீல்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக ஒதுக்கப் பட்ட நிதி விபரம் வருமாறு:
பட்டணமும் சூழலும் - 21 மில்லியன் ரூபா
மூதூர் - 21 மில்லியன் ரூபா
கிண்ணியா - 15.5 மில்லியன் ரூபா
குச்சவெளி - 12 மில்லியன் ரூபா
கந்தளாய் - 11.5 மில்லியன் ரூபா
சேருவில - 8 மில்லியன் ரூபா
தம்பலகமம் - 6 மில்லியன் ரூபா
மொரவெவ - 5 மில்லியன் ரூபா
கோமரங்கடவெல - 5 மில்லியன் ரூபா
பதவி சிறிபுர - 5 மில்லியன் ரூபா
வெருகல் - 5 மில்லியன் ரூபா