கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இடத்துக்கு இராணுவத்தினர் 100 பேர் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறித்த பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இலங்கை விமானப் படையின் பெல் 212 விமானமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.