முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக தொடர்கின்றது. அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு சில அரசியல்வாதிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்தார். பல முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டும் இற்றைவரை அவர்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
இதன் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சர் றிஷாட் தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.