ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கண்டனம் தெரிவித்து மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் 14வது நாளான இன்றும் பலரது பங்கேற்றலுடன் நடைபெற்றது குறிப்பாக இந்த நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான நவவி மற்றும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் மற்றும் முன்னாள் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் இன்னும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களுக்கும் அங்கு நடைபெறும் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் வெளியீடு செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யும் வரையில் இப் போராட்டம் தொடரும் என்றும் இதற்காக அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிபேதம் இன்றி தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.