தகாத உறவினால் 15 வயது சிறுமி கர்ப்பம் - இரு பிள்ளைகளின் தந்தை கைது

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை மீண்டும் இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை மொறட்டுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்குமாறும் திருகோணமலை மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க நேற்று (04) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொறவெவ- நாமல்வத்தை பகுதியைச்சேர்ந்த கே.நஜீப் (28வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் அவரது தங்கையுடன் இவர் தொடர்பு வைத்திருப்பதாகவும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டையடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.நஜீப் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதையடுத்து மனைவி விகாகரத்து பெற உள்ளதாகவும் மனைவியின் விருப்பத்துடன் தங்கையை திருமணம் முடித்து வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆனாலும் 15வயதாக இருப்பதினால் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -