மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக பதுளை மாவட்டத்தில் அம்பிட்டிகந்த தோட்டத்தில் 157 தனிவீட்டுத் தொகுதி அடிக்கல் நாட்டு விழா நேற்று அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் தனி வீடுகள் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் 10 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு உறுதி பத்திரத்துடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இவ் அடிக்கல் நாட்டு நிகழ்வில் அமைச்சர் ஹரின்பெனான்டோ, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரகளான அ. அரவிந்குமார் , வடிவேல்சுரேஸ் , எம். சச்சிதானந்தம் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னனியின் அமைப்பாளர் ராஜமாணிக்கம் உட்பட பல அதிதகள் கலந்துகொண்டனார்.