கர்ப்பிணியான குற்றத்திற்காக 16 வருடம் தண்டனை அனுபவித்த பெண்ணொருவர் தொடர்பான செய்தி பிரேஸிலில் தெரியவந்துள்ளது. தனது 20 வயதின் போது குடும்பத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் காதல் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கர்ப்பிணியாகியுள்ளார். எனினும் கர்ப்பிணியானதை அறிந்த தினத்தன்று அவரின் சகோதரன் இந்த பெண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த அறையில் அடைத்துள்ளார்.
வீடு வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அந்த பெண் கூச்சலிட்டும் அது யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அந்த பாழடைந்த அறையிலேயே தனது குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் பிறந்த குழந்தையை வேறு ஒருவருக்கு குறித்த சகோதரன் வளர்ப்பதற்காக வழங்கியுள்ளான். பின்னர் பல வருடங்களுக்கு பின் அயலவர் ஒருவர் அந்த பாழடைந்த அறை தொடர்பில் சந்தேகித்து காவற்துறையிடம் முறையிட்டுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை காப்பாற்றி, சகோதரனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தனக்கு இரு வேளை மாத்திரமே உணவு கொடுக்கப்பட்டதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.