மறிச்சுக்கட்டி மக்களின் 16வது நாள் போராட்டம் - மத தலைவர்கள் பங்கேற்பு

எஸ்.எச்.எம்.வாஜித்-
னாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்யக்கோரி இன்றுடன் 16வது நாளாக மன்னார் முசலி மக்கள் சுழற்சி முறையில் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தில்லையடி முஹாஜிரீன் அரபு கல்லுாரியின் தலைவர் முபாரக் றசாதி தலைமையிலான குழுவினர் மறிச்சுக்கட்டிக்கு வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

முபாரக் மௌலவியின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் மற்றும் மன்னார் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் என பலர் கலந்து கொண்டார்கள்.

மன்னார் மாவட்ட ஆயர் தெரிவிக்கையில்;

இந்த முஸ்லிம் மக்களின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவுகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் உங்களுடைய பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு கிடைக்க வேண்டும் அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் அதற்காக நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முபாரக் றசாதி தெரிவிக்கையில்;

இந்த மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் கொழும்பில் இருந்து கொண்டு வர்த்தகமானி அறிவித்தலுக்காக முழு வேலைகளையும் செய்து உள்ளார்கள் இதனை வண்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம். இப்படி சிறுபான்மை மக்களுக்கு இடம்பெறும் அணியாங்களை தடுக்க கேட்க வேண்டிய நிலையில் இன்றைய சிறுபான்மை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் எனவும் நல்லாட்சி அரசாங்கம் மக்களை வதைக்க வேண்டாம் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -