மகளிர் அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் பிரவேசத்திற்கான பரீட்சை - 2017

எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்இய்யது தஃவதில் இஸ்லாமியா - கல்குடாவின் ஏற்பாட்டில் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் மகளிருக்கு இஸ்லாமிய போதனைகளை வழங்கி இஸ்லாத்தை கற்றறிந்த ஆலிமாக்களாகவும், தாயியாக்களாகவும் உருவாக்கும் நோக்கில் மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வரும் மேற்படி கல்லூரியின் இவ்வாண்டிற்கான (2017) புதிய மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

•ஆங்கில கனணித்துறையில் டிப்ளோமா சான்றிதழ்

•அரபு மொழியில் புலமை

•தையல் துறையில் பயிற்சியும் சான்றிதழும்

•கலைத்துறையில் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு

•அல் ஆலிம் பகுதி ஒன்றில் பரீட்சைக்கு தயார்படுத்தல்

•ஐந்து ஆண்டு பாடநெறியின் இறுதியில் ஆலிமா சான்றிதழ்

என்பவற்றை இலக்காக கொண்டு இயங்கும் மேற்படி கல்லூரியின் புதிய மாணவிகள் பிரவேசத்திற்கான எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00மணிக்கு தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

எனவே, இதற்காக விண்ணப்பித்த விண்ணப்பிக்க தவறிய அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகைமைகள்;

2015/2016ல் க.பொ.த.சா/தப் பரீட்சையில் தோற்றியிருத்தல்.

அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருத்தல்.

இஸ்லாமிய ஒழுக்க முறைகளைக் கடைப் பிடிப்பவராகவும், தஃவாப் பணியில் ஆரவமுள்ளவராகவும் இருத்தல்.

தேக ஆரோக்கியமுடையவராக இருத்தல்.

18 வயதிற்குட்பட்டவராக இருத்தல்.

பரீட்சைக்கு வரும் போது

பிறப்புப் பதிவு

க.பொ.த.சா/த பரீட்சைப் பெறுபேறு.

ஏனைய கல்வித் தகைமைகள்.

தொடர்புகளுக்கு - 0776054612
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -