யாழ். கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மகளீர் தின நிகழ்வு இன்று (17.04.2017) திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி திருமதி சி.பஞ்சராஜா (சிரேஸ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலை), திருமதி. த.சங்கீதா (முகாமையாளர், இலங்கை வங்கி, கைதடி), ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக கே.சதீசன் (கிராம அலுவலர், கைதடி மேற்கு), செ.பேரின்பநாதன் (முதல்வர், கைதடி மு.ம.க), நா.சிவதிருச்செந்தூர்நாதர் (தலைவர், விவசாய சம்மேளனம், கைதடி மேற்கு), இ.கந்தசாமி (தலைவர், தென்மராட்சி மேற்கு ப.நோ.கூட சங்கம்), க.சுதாகரன் (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், தேவாரம், மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்று மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்றது. தொடர்ந்து சிறப்பு மிக்க நாடகங்கள் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து நல்லின மரக்கன்றுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதன்போது மரக்கன்றுகளை வழங்கிவைத்தார்.