மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவருமான ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமாண பி. திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, எம். உதயகுமார், ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்..பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவதையும், அமைச்சர் திகாம்பரம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு –அடிக்கல் நாட்டப்பதுவதையும் படங்களில் காணலாம்.