மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து அகதிகளாக்கப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களை திருடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையினால் இரவு நேரத்தில் அகதிகளாக்கப்பட்டவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பொலிஸ் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது.
இதுவரையில் 17 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.