25000 பேருக்கு மேலான மக்களுக்கு கண் சத்திர சிகிச்சை வழங்கிய இஸ்லாமிய அமைப்பு -இலங்கையில்





இக்பால் அலி-

ஸ்லாமிய சமூக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுவாக இங்கையிலுள்ள எல்லா இன மக்களையும் கருத்திற் கொண்டே செயற்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலங்கையில் கண் சத்திர சிகிச்சையினை சுமார் 25000 பேர் அளவிலான மக்கள்; பெற்று இருக்கின்றார்கள். இதில் சிங்கள . தமிழ் முஸ்லிம், கிறிஸ்வதவ அனைத்து இன மக்களும் இதன் மூலம் இலவசமாகப் பயன்பெற்றுள்ளனர் என்று சவூதி ஆரேபியா இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் தெரிவித்தார்.

சபாப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சவூதி ஆரேபியாவின் ராபிதாவின் கீழ் இயங்கும் இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பினால் 22 வது தடவையாக கண்ணில் வெள்ளை படர்தல் சத்திர சகிச்சை முகாம் புத்தளம் குவைட் வைத்திய சாலையில் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்நிகழ்வு தொடர்பான விசேட கூட்டம் புத்தளம் குவைட் வைத்தியசாலையில் சபாப் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் மௌலவி தாசிம் தலைமையில் இடம்பெற்றபோது இதில் விசே;ட அதிதியாகக் கலந்து கொண்ட சவூதி அரேபியா இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

சவுதி அரேபியாவின் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு 1992 ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் தங்களுடைய சமூகப் பணியை ஆற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அன்று இன்று வரை இந்த நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் பொதுவாக எல்லா இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் சேவையாற்றக் கூடிய அமைப்பாக இருந்து வருவதை நாங்கள் பார்க்கின்றோம்.. சுமார் 63 நாடுகளில் இந்த நிறுவனங்கள் ;தாபிக்கப்பட்டு சவூதி அரேபியாவை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றன. பொதுவாக பெரியதொரு சேவையை உலகம் முழுவதும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்டில் ஏற்பட்ட பாரியதொரு அனர்த்தமான சுனாமியின் போது எமது நிறுவனத்தின் மூலம் கணிசனமாளவு சேவையை செய்துள்ளது என்பதை நாங்கள் மறந்து விட முடியாது. எனவே இத்தகைய நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்ற வரையறை இல்லை. எந்த நாடுகளில் அனர்த்தங்கள் ஏற்படுமோ அந்த நாடுகளுக்குச் சென்று பாரிய உடனடிச் சேவைகளை வழங்கி வரும் முன்னணிமிக்க ஒரு சர்வதேச நிறுவனமாகும்.

கண் சிகிச்சை முகாமைப் பொறுத்தவரை அல் பஸர் , சாபாப் சர்வதேச இஸ்லமிய நிவாரண அமைப்பபு (ஐ ஐ ஆர் ஓ ) ஆகிய அமைப்புக்கள் சேர்ந்து ஏராளமான கண் சத்திர சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறோம். எவ்வளவுதான் நாங்கள் முகாம்களை நடத்தினாலும் ஏராளமான சகோதரர்கள் தேவையுள்ளவர்களாக இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.

நாங்கள் கடந்த வருடம் 1000 பேருக்கான கண் சிகிச்கைகள் ஏற்பாடுகள் செய்த போதும் 1200 பேருக்கான கண் சிகிச்சையை செய்து தந்தார்கள். பாக்கிஸ் தான் நாட்டில் இருந்து இங்கு வருகை தந்துள்ள வைத்திய அதிகாரி பகுர்தீன் தலைமையிலான வைத்தியக் குழவினர்கள் 1000 தான் உங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதற்கு மேல் எம்மால் சிகிச்சை செய்ய முடியாது என்று கூறியது கிடையாது. கடந்த வருடம் 1200 பேருக்கு சிகிச்சை செய்து உதவினார்கள். அதேவேளை இம்முறையும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 பேராக இருந்தாலும் 1200 பேர் அளவில் கண் சிகிச்சைக்கு பெயர் பதிவு செய்துள்ளார்கள்.

எமது சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு கடந்த மாதம் இந்த கண் சிகிச்சை முகாமை நைஜீரியாவில் செய்தார்கள். அடுத்த கண் சத்திர சிகிச்சை முகாம் சோமாலியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் ஒரு தடவைக்கு 1000 மட்டுமல்ல இதை விடக் கூடுதலாக நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாநாயகவைச் சந்தித்தோம். இந்தச் செயற் திட்டத்தை மேலும் விஸ்தரித்து ஏனைய மாவட்டங்களிலும் மேற்கொள்வது தொடாபாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். எனவே இந்த முகாமில் யார் யாரேல்லாம் பயன்பெறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண:;டும்.

இதில் விசேடமாக கண் சத்திர கிசிச்சை மேற்கொள்வதற்காக சிங்கள . தமிழ் மக்கள் உள்ளனர். அவர்களுடைய சித்திரைப் புத்தாண்டில் சத்திர சிகிச்சை பெற்றுச் சென்று சிறந்த பார்வையுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலேயே இந் நாட்களைத் தெரிவு செய்து நடத்துகின்றோம்

இந்த கண் சத்திர சிகிச்சைக்காக குருநாகலில் கண் மருத்துவ முகாமை நடத்தியது போது தமிழ் தாய் ஒருவர் எனக்கு 80 வயதாகிறது. புத்தளம் வந்து சத்திர சிகிச்சை மேற்கொள்ளவதற்கு கூட்டிச் செல்ல யாரும் இல்லை. என்று கூறினார். அந்த தாய்க்கு சகல போக்வரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எல்லா மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தான் இந்தச் சேவை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

எனவே எமது இயக்கங்களின் சேவைகள் அதிகரிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹீர் , சிலாபம் விஹாராதிபதி நவதம்குலகே மேதானந்த தேரர், சபாப் நிறுவனத்திப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ரஷீத் , புத்தளம் குவைட் வைத்தியசாலையின் பிரதிநிதிகள், ஐக்கிய தேசியக கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச அல் பஷர் வைத்தியக் குழுவின் பொறுப்பாளர் வைத்திய அதிகாரி பகுர்தீன் தலைமையில் விஜயம் செய்துள்ள வைத்திய குழுவினருடன் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த பிரதிநிதி வைத்திய அதிகாரி ஆதில் அல் சுஐபானி சமூமளித்திருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -