மீதோட்ட சம்பவம் : இன்று நண்பகல் வரை 27 உடல்கள் மீட்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொலன்னாவ மீதோட்ட  முல்லை உயிரிழப்பு 27ஆக உயர்வு மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என்ற வியூகத்தில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைக்க அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதுடன் அனர்த்தம் இடம் பெற்ற பகுதிகளுக்குள் எவரும் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றன.


இதுவரை சுமார் 800 பேர் வரை அப்பகுதியிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரழந்தவர்களின் மேலும் சில உடல்களின் இறுதிச் சடங்குகள் அரச செலவில் இடம் பெறுகின்றன. பெருமளவான மக்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடுகளை விரைவாக வழங்க அரசாங்கம் தகவல்களைத் திரட்டுகின்றன. இதேவேலை குறித்த பகுதிகளில் பொருட்களை சூறையாடச் சென்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -