அபு அலா-
இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளன.
பாதிப்புக்குள்ளான மக்கள் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வைத்திய சிகிச்சைகளை பெற்றுவருவதாகவும், அவர்களுக்கான வைத்திய சிகிச்சைளையும், அவர்களுக்கு தேவையான வைத்திய மருந்து வகைகளையும் வழங்குவதற்கான சகலவித நடவடிக்கையினையும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.