வடமேற்கு சிரியாவின் மீது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரின் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலில் பெண்கள், சிறு குழந்தைகள் உட்பட 35 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவிலுள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தகவலை வழங்கியுள்ளது.
குளோரின் ரக நச்சு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இந்த நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விமானம் சிரிய விமானப் படைக்கோ அல்லது சிரிய விமானப்படைக்கு ஆதரவு வழங்கும் ரஷ்ய விமானப் படைக்கோ உரிய தாக்குதல் விமானமாக இருக்கலாம் எனவும் சிரிய மனித உரிமைகள் அமைப்புக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.