சென்னையில் சில நாட்களாக தங்கம் விலை ஸ்திரமற்ற நிலையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி பவுன் ரூ. 22 ஆயிரத்து 120 ஆக இருந்தது. மறுநாள் 4-ந்தேதி ரூ.232 உயர்ந்து ரூ. 22 ஆயிரத்து 352-க்கு விற்றது.
அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. நேற்று ரூ.22 ஆயிரத்து 160 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.352 உயர்ந்தது.
ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 512 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.352 அதிகாரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,814-க்கு விற்கிறது.
தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட கார ணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 100 ஆக உள்ளது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து இதே விலை நிலவுகிறது. அதே நேரத்தில் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.45.60 ஆக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -