அப்துல்சலாம் யாசீம்-
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தேடிய சங்கத்தின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று (23) 50வது நாளை கடந்துள்ளமையினால் தங்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு நடைபவணியொன்றினை மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள சுற்று வட்டத்திற்கு சென்று மீண்டும் ஆளுனர் அலுவலத்தை சென்றடைந்தது.
இலங்கை அரசினால் தமக்கான சிறந்த தீர்வுகள் இதுவரை காலமும் வழங்கப்படாத நிலையில் அமேரிக்கா அரசாங்கமாவது தமக்கு சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் தமிழர்களின் தேவையை தீர்ப்பதற்கும் எமது காணாமல் போனவர்களது பிரச்சினைக்கான முடிவுகளுக்கும் அமேரிக்கா தலைமையகம் தீர்வினை பெற்று தருமாறும் நடைபவணியில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.