500 Kg நிறை கொண்ட இமான் அஹமதுவின் அதிசயிக்கத்தக்க மாற்றம்.!

எஸ். ஹமீத்-
லகத்திலேயே மிகக் கூடுதலான நிறை கொண்ட பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 500 கிலோ கிராம் நிறையான எகிப்தைச் சேர்ந்த பெண்மணி இமான் அஹமது, விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள சைஃபி மருத்துவமனைக்கு வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட படுக்கையிலிருந்தே விமானத்தில் கிரேன் மூலம் இறக்கப்பட்டு அவர் மருத்துவ மனைக்குக் கொண்டு சொல்லப்பட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அவரது எடை என்ன தெரியுமா...?

அவரது எடை முன்னர் இருந்ததைவிடச் சரி பாதியாகிவிட்டது. ஆமாம்...500 கிலோ கிராம் 250 கிலோ கிராமாகக் குறைந்துவிட்டது. இந்தச் செய்தி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, அவருக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கூட மிக்க மகிழ்ச்சியையளித்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சைஃபி மருத்துவமனையில், மருத்துவர் முஃபஸல் லக்டாவாலாவின் தலைமையிலான மருத்துவர் குழுவினர் இமானுக்கு எடைக்குறைப்பு அறுவைசிகிச்சையை நடாத்தினர். தொடர்ந்தும் அவருக்குப் பல்வேறு சிகிச்சைகளை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இமான் தற்போது வீல் சேரில் நீண்ட நேரம் உட்காரக் கூடியதாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. எனினும் இளமைப்பருவத்தில் இமானுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயினால் உடலின் ஒரு பகுதி முடங்கிப் போயிருப்பதாகவும் அவருக்குப் பேசுவதிலும், உணவுகளை உட்கொள்ளுவதிலும் கஷ்டங்கள் இருப்பதாகவும் டாக்டர் முஃபஸல் தெரிவித்துள்ளார்.

தற்போது இமான் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது கின்னஸ் சாதனை பறிபோய்விட்டதைப் பற்றி அவருக்கு எந்தக் கவலைகளும் இல்லை. இமானின் முன்னைய மற்றும் தற்போதைய தோற்றங்களைப் படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -