திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிண்ணியா பகுதியில் சுற்றிவலைப்பில் ஈடுபட்ட பொலிஸார் பைசல் நகர் கிண்ணியா முன்றாம் வட்டாரத்தில் 55 டைனமைட் குச்சிகளை விற்பனைக்கா முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற அப்துல்லா முகமது ரபீக் வயது-45 என்பவரை கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடம் இருந்து கைப்பட்ட வெடிமருந்துகளையும் திருகோணமலை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்டது 138 கிராம் வெடி மருந்துகள் எனவும் அதன் பெருமதி 38500 ரூபா எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.