பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பாசரையில் வளர்ந்த ரவூப் ஹக்கீம் அவர்கள் அவரின் மரணத்திற்கு பிற்பாடு முஸ்லிம்களின் உரிமைக் குரலாகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைமைப் பதவியை ஏற்று இன்று வரை பல களுத்தறுப்புக்களுக்கும்,விமர்சனங்களுக்கும் மத்தியில் வழி நடாத்திக் கொண்டு செல்கிறார்.
நாட்டின் தற்போதய சூழ் நிலையில் விஸ்பரூபமெடுத்துள்ள வில்பத்து பிரச்சினை, சமூகம் சார் பிரச்சினை,தேர்தல் யாப்பு திருத்தம் போன்ற இன்னொறன்ன பிரச்சினைகளை முஸ்லிம் சமூகத்துக்கு ஓரணியில் நின்று சாதகமான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இக்கட்சிக்கும்,தலைமைக்குமே உண்டு.
அந்த வகையில் உள் நாட்டில் மட்டுமன்றி வெளி நாட்டிலும் எம் சமூகத்தின் உரிமை,அபிவிருத்தி போன்றவற்றுக்காக பாடுபடுகின்ற இக் கட்சியின் கீழ் ஒவ்வொரு இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஏனைய அதிகாரமுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழுலுள்ள முஸ்லிம் காங்கிரஸில் ஒன்றினைந்து செயற்படுவதென்பது காலத்தின் தேவை என கருதுகிறேன்.
அவ்வாறான எமது தேசிய கட்சியின் தேசிய தலைமையான ரவூப் ஹக்கீம் அவர்கள் தான் இன்று தனது ஐம்பத்தியேழாவது வயதில் தடம்பதிக்கிறார். முஸ்லிம் சமூகத்துக்கெதிராக கிளர்ந்தெழும் அனைத்து வித சவால்களையும் வெற்றி கொள்ள கூடிய
ஆற்றலையும்,ஆரோக்கியத்தையும்,திடகாத்திடமான மன உறுதியையும்,நீண்ட நாள் ஆயுளையும் வல்லோன் அல்லாஹ் அவருக்கு வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதோடு கல்குட தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சார்பாக எம் வாழ்த்துக்களையும் தெறிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கல்குடா தொகுதி மத்திய குழு
வை.எம். பைரூஸ்