க.கிஷாந்தன்-
பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை கட்டி அமைக்க 23.04.2017 அன்று அடிக்கல்நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இதில் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமை தாங்கிஅடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
போகாவத்தை தோட்டத்தில் வீடுகள் அற்ற 60 குடும்பங்களுக்கு புதிய தனி வீடுகளை அமைச்சின் மூலம் அமைத்துக்கொடுக்கவே அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.