இறக்காமத்தில் கந்தூரி உணவு விஷமானதால் ஒரு மரணம்- 600 பேர் வைத்தியசாலையில்

றிஸ்வி ஹுஸைன் -

ந்தூரி உணவு விஷமானதால் மக்கள் வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டு 500க்கு மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் இடமில்லாத காரணத்தினால்  வைத்தியர்களும் தாதிமார்களும் அம்புலான்ஞ் வாகனங்களும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இறக்காமத்தின் இளைஞர்களும் பொது மக்களும் களத்தில் நின்று தங்களால் முடிந்த சேவைகளைச் செய்தவண்ணம் இருக்கின்றனர்.

 இதே வேளை அம்பாரை வைத்தியசாலையிலும், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற வைத்தியசாலைகளுக்கும் சிலர் அம்புயூலன்ஸ் மூலமாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.


இதுவரை ஒருவர் மரணித்துள்ளதுடன் மேலும் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகளுக்கு இணைந்திருங்கள் இம்போட்மிரருடன்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -