அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் நில மட்டத்தில் விஸ்தரிப்பு - ARM ஜிப்ரி



எம்.எஸ்.எம். ஸாகிர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை கிராமங்கள் தோறும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள பல ஊர்களிலும துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இக்கட்சியின் பங்காளர்களாக மக்கள் இருந்து செயற்படுகின்ற ஜனநாயக வழிமுறைகள் ஏற்படும். தத்தமது பிரதேசங்ளின் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உட்பட சகல செயற்பாடுகளும் நிலமட்டத்தில் வெற்றிகரமாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் அமையும். இவ்வாறு கைத்தொழில்,வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும், அ.இ.ம.கா. கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.

கல்முனைக்குடியில் குறிச்சிகள் தோறும் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது அதில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில்,

அரசியலில் நிலவும் ஏகபோக சர்வாதிகாரப் போக்குகள், ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டி சிறந்த போக்குடைய அரசியலை முன்னெடுப்பதற்கு இந்த நிர்வாகக் கட்டமைப்பு வழிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிகளிலுமுள்ள பிரச்சினைகள், தேவைகள், அபிவிருத்தி தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டி இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் வைத்து 250பேர் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர். விரைவில் குறிச்சி மட்டத்திலான கூட்டங்களைத் தொடராக நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் கிராமியப் பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி,கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.சீ.எம். முபீத், பெஸ்டர் றியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -