ஊடகப்பிரிவு-
புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று காலை (03) கைப்பற்றினர்.
இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படாது அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததனாலேயே அதிகாரசபை அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
ஒரு வர்த்தக நிலையத்தில் 2500 கிறீம் டியுப்களும் இன்னொரு வர்த்தக நிலையத்தில் 1500 கிறீம் டியுப்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்கள். வர்த்தகர்களை விசாரணை செய்த போது ஓவ்வெரு டியுப்களும் தலா 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் 2003ம் ஆண்டு 9ம் இலக்க சட்ட விதிகளின்படியே இந்த பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும் , இந்த வர்த்தக நிலையங்களின் வியாபார உரிமையாளர்கள் நாளை 4ம் திகதி மாளிகாவத்தை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அதிகாரசபை தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார்.