அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல். மற்றும் சலி காரணமாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் இருவர் இன்று (03) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் துறைமுக பொலிஸ் எல்லைக்குற்பட்ட திருகோணமலை- மின்சார நிலைய வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான வீ,ராஜலக்மி (35வயது) எனவும் காய்ச்சலுடன் கூடிய சலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கிளிவெட்டி- அரியமன் கேணி பகுதியைச்சேர்ந்த ஆனந்த பாபு லெட்சுமி (32வயது) காய்ச்சல் மற்றும் தொய்வு காரணமாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஒரு பிள்ளையின் தாயாரான ஆனந்த பாபு லெட்சுமி (32வயது) அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அழிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இருவரினதும் சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தியதாகவும் அதில் திருகோணமலையை-ச்சேர்ந்த வீ.ராஜலக்மி நிமோனியாவினால் உயிரிழந்துள்ளதாகவும் மற்றய பெண் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர தெரிவித்தார்.
தற்போது நாட்டில் டெங்கு. எச் 1 என் 1 வைரஸ் பரவி வருவதினால் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு எம்.ஆர்.ஜ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர மேலும் தெரிவித்தார்.