எஸ்.ஹமீத்-
இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரும் (Software Engineer), இளம் தொழிலதிபருமான அப்துல்காதர் ராசிக் ஐ.நா-சபை நடாத்திய சர்வதேச போட்டியொன்றில் முதற் பரிசை வென்றுள்ளார். ஐ.நா சபை, தன்னுடைய சபை நடைமுறைகள் மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள், வாக்கெடுப்பு முறைகள் என அனைத்தையும் உலகம் முழுவதுமுள்ளவர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கான மென்பொருள் கருவியினைக் கண்டுபிடிக்க, போட்டி ஒன்றை அறிவித்தது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த அப்துல் காதர் ராசிக் வடிவமைத்த மென்பொருள் முதற் பரிசை வென்றுள்ளது. அப்துல் காதர் ராசிக்கிற்கான பரிசும் சர்வதேச அங்கீகாரமும் விரைவில் கிடைக்க இருக்கிறது.
இதற்கு முன்னமும் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட போட்டியொன்றிலும் தனது 'நிலையான நகரங்களுக்கான இணைப்புகள்' என்ற மென்பொருளைச் சமர்ப்பித்ததன் மூலம் அப்துல் காதர் ராசிக் முதற் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.