திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் ஆலங்கேணி பாடசாலைக்கு அருகில் புத்தாண்டை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மூவரில் முத்துராசா சாந்தன் வயது 21 என்பவர் மின்கம்பந்தத்தில் மோதியதால் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமானார்.
இவர் கிண்ணியா 1 ஆலங்கோணியில் பிறந்து புல்மோட்டையில் மிக அண்மையில் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.இறந்தவருடைய உடல் கிண்ணியா தளவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.