கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொடர்பான விபரங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானித்துள்ளார். நாட்டின் உண்மையான கடன் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிக்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் பெற்ற கடன் அல்ல எனவும் கடந்த அரசாங்கம் பெற்ற கடன் மற்றும் வட்டி காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.