கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடனும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை இன்று (17) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஏற்பாடு செய்து நடாத்தினார். குறித்த கலந்துரையாடலில் இந்நிகழ்வில் மேற்கொள்ள ஒழுங்குகள் தொடர்பாகவும்,சுகாதார வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும், ஆராய்ப்பட்டது.
இதன் போது அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், முப்படைத்தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.