பொத்துவில் தாஜகான்-
கிழக்கு மாகாணத்தின் 17 வலயங்களுள் அக்கரைப்பற்று வலயம் 2016 க.பொ.த சா/த முதலிடம் பெறுவதற்கு பிரதான காரணங்களுள் பரிட்சைப் பெறுபேறும் காணப்படுகின்றது. இப்பரிட்சைப்பெறுபேற்றின் உயர்வில் 2016 பொத்துவில் உபவலயப் பாடசாலைகளின் க.பொ.த சா/த பெறுபேறுகள் உயர்மட்டத்தில் காணப்படமையாகும். என்று அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். எம். காசிம் அவர்கள் தெரிவித்தார்.
நேற்று(2017.04.06) பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டியானது வித்தியாலயத்தின் அதிபர் என். ஜஹ்பர்சாதிக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் பொத்துவில் பிரதேசத்தின் கல்வியின் உயர்வுக்கு அக்கரைப்பற்று வலயத்தின் முக்கிய பங்கு அளப்பரியது. அக்கரைப்பற்று வலயத்தில் இருந்து ஆசிரியர்களை நியமித்துள்ளோம். அதன் நிமித்தம் இன்று க.பொ.த. சா/த பரிட்சைப் பெறுபேறுகள் இங்கு உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
பொத்துவில் மத்திய கல்லூரியில் 01 மாணவனும், அல் இர்பான் மகளிர் கல்லூரியில் 02 மாணவியும், அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் 01 மாணவியும் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்றுள்ளார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. இச்சந்தர்ப்பத்தில் திறமைச் சித்திகளைப் பெற்று அக்கரைப்பற்று வலயத்திற்கும், பொத்துவில் உபவலயத்திற்கும் பெருமையினை ஈட்டித்தந்த அனைத்து மாணவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். அதுமாத்திரமன்றி அல்பஹ்ரியா வித்தியாலயம் 2016 க.பொ.த சா/த பரிட்சைக்கு தோற்றி 9 பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்றுள்ளமையினை பாராட்டுகின்றோம். அவ்வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அந்த வகையில் வலயக்கல்விப்பணிப்பாளர் என்ற வகையில் பாராட்டுகின்றேன்.
இந்நிகழ்வில் உபவலயக்கல்விப்பணிப்பாளர் என். அப்துல் வஹாப், விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜெமில், ஆசிரிய ஆலோசகர்களான இப்றாகிம், பாயிஸ், மற்றும் பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உபவலயக்கல்விப்பணிப்பாளர் என். அப்துல் வஹாப், விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜெமில், ஆசிரிய ஆலோசகர்களான இப்றாகிம், பாயிஸ், மற்றும் பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.