பாலிவுட் நடிகை ஒருவர், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது ஹோட்டல் அறைக்கு வெளியே நடிகர் ஒருவரிடம் கெஞ்சியுள்ளார். ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படம் மூலம் இந்தி பட உலகில் காலடி வைத்தவர் மாஹிராகான். இந்தி படங்களில் நடித்தாலும் இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்.
பாகிஸ்தான் கலைஞர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியதால் சொந்த நாட்டுக்கு திரும்பினார். சமீபத்தில், துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை மாஹிராகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஹோட்டல் அறை வாசலில் நிற்கும் ரன்பீர் கபூரிடம் மாஹிரா கும்பிட்டபடியே கெஞ்சுவது போன்ற வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
ரன்பீரை சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அப்படி பேசுகிறார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.