முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தனது சொந்த விருப்ப வெறுப்புகளுக்காக மகிந்தவிடமும் 2002ம் ஆண்டிலிருந்து பணத்துக்காக சர்வதேசத்திடமும் தொடர்ச்சி யாக அடமானம் வைத்த ரவூப் ஹக்கீம் இன்று தனது நிகழ்ச்சி நிரல் மக்கள் மயப்பட்டு போவதையும் தனது தரகு வேலைகளை மக்கள் இலகுவாக புரிந்து கொள்ளவதையும் சகிக்க முடியாமல் பதவிக்காக அவரிடம் ஒட்டுண்ணி வேலை செய்யும் தரகர்களை பயன்படுத்தி அதாஉல்லாஹ் மீது வீண்பழி சுமத்த முனைவதயும் அவர்கள் இன்று காரணம் ஏதுமுன்றி திண்டாடுவதையும் மிக தெளிவாக அவதானிக்க முடிகிறது.
இன்று நுரைச்சோலை வீட்டு திட்டம்
வட்டமடு காணி பிரச்சனை
ஏனைய காணி பிரச்சனைகளை மகிந்தவிடம் முடிச்சு போட்டு அதாஉல்லாஹ் வின் கணக்கில் போட்டு விடுகிறார்கள். மகிந்த அரசு காலத்தில் தாம் அதே அரசில் அமைச்சர்களாகவும் இருந்து முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று தமது தேவைகளையும் நிவர்த்தி செய்து மீண்டும் நல்லாட்சி எனும் பெயரில் உருவான ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கூட அதிகாரத்தில் இல்லாத அதாஉல்லாஹ் மீது பழி போட முனைகின்ற அரசியல் குறுடர்கள் மக்களை குறுடர்களாக எண்ணி விட முடியாது.
ர வூப் ஹக்கீம் என்பவருக்கு தனது அரசியல் வீழ்ச்சி தொடர்பில் மிக தெளிவான அவதானிப்புகள் புரியும்.குறைந்த பட்சம் கண்டியில் ஐதேக யுடன் இணைந்து தனது அரசியலை முன்னெடுக்கவாவது இறுதி சந்தர்ப்பம் தேடுகிறார்.
அதற்க்காக அம்பாரையில் இருக்கின்ற அரசியலின் கடைநிலை அசிங்கங்களால் சில சலசலப்புகள் அறிக்கை எனும் பெயரால் அரங்கேறுகிறது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அறிஞர்களும் புத்திஜீவிகளும் மிக கவனமாக கிழக்கு மக்கள் அவையத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
வரலாற்றில் ஹக்கீம் முஸ்லீம சமுகத்தை அடகுவைக்க எடுக்கின்ற இரண்டாவது முயற்சியும் இன்சா அல்லாஹ் தோல்வியடையும்.
எமது மக்களின் அபிலாசைகளை நாமே தீர்மானிக்க இருக்கின்ற சந்தர்ப்பம் மிக தெளிவாக தொடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் தொடராக எம்மோடு பயணிக்கவும் தயாராகி விட்டனர். வடக்கு கிழக்கை இணைத்து கிழக்கு முஸ்லிம் மக்களை நடு வீதியில் தள்ளும் தூரோகத்தனத்துக்கு முட்டுக்கட்டையாகவும் அம மக்களின் காவலனாக அதாஉல்லாஹ் செயற்படுவதே தரகர்களுக்கு வந்திருக்கும் தலையிடி.