கறுப்பு வேன், வெள்ளை வேன் தொல்லை இந்த அரசாங்கத்தில் இல்லை - அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்-

டந்த அரசாங்கத்தில் கறுப்பு வேன், வெள்ளை வேன் என தொல்லைகள் தந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் அத்தகைய தொல்லைகள் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றேன் என மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை கட்டி அமைக்க 23.04.2017 அன்று அடிக்கல்நாட்டப்பட்டது. அந்நிகழ்வில் தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

நாடு கடன் சுமையை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இந்த கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் அரும்பாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னோக்கி செல்கின்றது.

இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் மக்கள் அணைவருமே ஒற்றுமையுடன் வாக்களித்துள்ளனர்.

நமது நாட்டில் இன, மொழி, மத வேறுபாடு இல்லாமல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அணைவருமே முன்னெடுக்கப்பட வேண்டும்.

நான் தமிழ் மற்றும் சிங்கள, மூஸ்லிம் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றவன். எனக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் இல்லை. எனது அம்மா, அப்பா நான் பிறந்த இடத்தில் மூவினத்தினருடனும் நண்பராகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

அதேபோலவே நானும் வாழ்ந்து வருகின்றேன். கிராம பகுதிக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் கிராம பகுதிகளில் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என முயற்சித்தாலும் கிராம பகுதிகளை நாம் அபிவிருத்தி செய்து கொள்கின்றோம் என சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை இடுகின்றனர்.

ஆனால் கிராம பகுதிக்கு அபிவிருத்தி பணிகள் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதேவேளையில் அரசாங்கம் எனக்கு தோட்டபகுதிகளுக்கே அபிவிருத்தி பணிகளை செய்தவதற்கான வாய்ப்பை தந்துள்ளது.

இந்த நிலை எனக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கின்றது. ஆனால் எதிர்வரும் காலத்தில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிராம பகுதிக்கும் அபிவிருத்தி பணிகளை செய்ய வாய்ப்பை பெறுவேன்.

இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களின் கரத்தை பலப்படுத்த வேண்டும். நாடு 9 கோடி ரூபாய் கடன் சுமையை எதிர்கொண்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் நாட்டின் அபிவிருத்தியில் அக்கரை கொண்டு செல்கின்றனர்.

அடுத்த வருடம் நாட்டின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை செய்து முடிப்பது இலக்காக அரசாங்கம் கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -